இந்த நாட்டில் குற்றச் செயல்கள், போதைப்பொருள்

ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு பொலிஸாருக்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு தேவை.

அத்துடன், பொலிஸாரை நம்பிய இலங்கை சமூகம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

"சுவசர கதெல்ல" சமூகக் கட்டியெழுப்பும் புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையக் குழுவின் களனிப் பிரதேச மத்திய நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தந்தை என அடையாளம் காணக்கூடிய நபர் ஒருவர் தனது குழந்தையை மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவதனைக் காட்டும் காணொளி ஒன்று பரவி, அந்த நபரை சட்டத்தின் முன்னிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரும் பல்வேறு சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையிலேயே சந்தேக நார் கைது செய்யப்பட்டார். மிக விரைவில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்

குற்றவாளி யார்? இந்தச் சம்பவம் இலங்கையில் எங்கு இடம்பெற்றது என்று எவரும் அறியாத நேரத்தில், பொதுமக்களின் ஆதரவுடன் பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பூரண ஒத்துழைப்போடு சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் மா அதிபர் கூறுகிறார். ,

பொலிஸார் மீது பொதுமக்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம் எனவும் பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகின்றனர்.

மேலும் தாம் விடும் தவறுகளை திருத்துவதற்கு பொலிஸார் தயாராகவுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அவர்களின் மன உறுதியை உடைக்க வேண்டாம் எனவும் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி