T20 உலகக் கிண்ணப் போட்டிக்குச் சென்ற இலங்கை

கிரிக்கெட் அணிபல பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டுள்ளது. மைதானத்துக்கும், கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கும் இடையே 45 நிமிட இடைவெளி மாத்திரமே இருக்க வேண்டும் என ICC சட்ட திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

என்றாலும் இங்கு ICC விதிமுறைகளை மீறி ஒன்றரை மணிநேரம் தூர இடைவெளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர இன்னும் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உரிய கவனம் செலுத்தாமை கேள்விக்குறியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மட்டும் 4 தனித்தனி மைதானங்களில் போட்டிகள் பட்டியலிடப்பட்டுள்ளதால், விமான தாமதத்தால் பயிற்சி ஆட்டங்களில் கூட பங்கேற்க முடியாத நிலமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இது தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஐ.சி.சி.யுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் சிறந்த தொடர்புகளைக் கொண்டிருந்தாலும் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியினர் கடுமையான அநீதிக்குள்ளாகி வருகின்றனர். திரிந்து வீரர்களின் சோர்வை வேண்டுமென்றே அதிகரிக்கும் ஒரு செயல்பாடும் கூட முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி