கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று

வந்த கைதி ஒருவர் நேற்று (4)  மாலை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இரவு அம்பிட்டிய பிரதேச  வீதி ஒன்றில்  தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த  14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த  சம்பவத்தின் சந்தேக நபராக இவர் கருதப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக  தெரிய வருகிறது.

சந்தேக நபர் 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸ் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் இணைந்து மேற்கொண்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி