எந்தத் தடைகள் வந்தாலும் சுதந்திரமான மற்றும்

நியாயமான தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான பொறுப்பாகும் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று (05) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரிய அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பப்ரல் ஆகியன தாக்கல் செய்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போதே பிரதம் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி