கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய

சந்திக்கு அருகில் இன்று (3) அதிகாலை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினரின் ஜீப் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்தபோது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது பயணித்த எவருக்கோ காயம் ஏற்படவில்லை எனவும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி