குருணாகலில் சட்டவிரோத இயங்கிய வேலைவாய்ப்பு
நிறுவனம் ஒன்றின் முகவர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் இன்று (31) கைது செய்துள்ளனர்.
குருணாகல் சுரதிஸ்ஸ மாவத்தையில் இந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கியதுடன் சவூதி அரேபியா, ஓமன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்சேர்ப்பு செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.
குறித்த நிலையத்திலிருந்து 110 கடவுச்சீட்டுக்கள் தொழிலுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருணாகல் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.