மின்சார கட்டணத்தை 10  சத வீதம் முதல் 20  சத

வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் இருப்பினும் மின்சார சபையை மறுசீரமைத்தால் மேலும் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள்  உள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இன்று (29) தெரிவித்தார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்  மகாநாட்டின்போதே  தனுஷ்க பராக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வருடத்தின் இரண்டாவது மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையை ஜூலை முதலாம்  திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு இந்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின்சார சபையின் தற்போதைய நிர்வாகம்  செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி