கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் 12 யோசனைகளை முன்வைத்துள்ளது.

அபாய வலயங்கள் தொடர்பில் ஆய்வு செய்து, ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்துவது ஏற்புடையது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடி ஆகியவற்றை திறப்பது சிறந்தது என்பது அவர்களின் கருத்தாகும்.

எனினும், இதனை நடைமுறைப்படுத்தும் போது சமூக இடைவௌியைப் பேணுவது முக்கியமானது எனவும் சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசனங்களில் 50 வீதத்திற்கு மக்களை வரையறுத்து போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி