நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கும் வகையில் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு எதிராக நாட்டில் பாரிய சதி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கலாவெவ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொகுதி மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகளின் முதலாவது பேரணியாக கலாவெவ தொகுதி பேரணி நேற்று (26) அநுராதபுரம் தலாவ நகரில் நடைபெற்றது.
கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தலைமையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் அடங்கிய இணைய தளமும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.