சிறுவனைக் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனையடுத்து ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று (20) 8 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார்.

இதற்கு மேலதிகமாக குற்றவாளிக்கு க்கு 20,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவனுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அரசு தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்தத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

09. 02 - 2013.11.02 க்கு இடைப்பட்ட காலத்தில் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் இக்குற்றச் சம்பவம் இடம்பெற்றதாக சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்திருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....