பாலஸ்தீனின் ரஃபா நகர்  மீதான தாக்குதலை நிறுத்துமாறும்

காசா பகுதியில் இராணுவ நடவடிக்கையை இடைநிறுத்துமாறும், சர்வதேச புலனாய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் காசா பகுதிக்குள் நுழைய அனுமதிக்குமாறும் தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் குழு சர்வதேச நீதிமன்றத்திடம் உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

ரஃபா நகரின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலியப் படைகளுக்கு அவசர உத்தரவைப் பிறப்பிக்குமாறு சர்வதேச நீதிமன்றத்தில்  இடம்பெற்ற விசாரணையில் தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் குழு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

 7 மாத கால இராணுவ நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் பிற உதவிகளை வழங்குவதற்கு போர்நிறுத்தம் அவசரமாக அவசியம் என தென்னாப்பிரிக்க வழக்கறிஞர்கள் குழு சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இந்த இராணுவ நடவடிக்கையினால் இதுவரை  35,000 பாலஸ்தீனியர்கள்  கொல்லப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....