கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிஹில்லதெனிய
பிரதேசத்தில் வீடு ஒன்றின் முதல் மாடியில் இருந்து தவறி வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
பிஹில்லதெனிய, நாரங்விட்ட பகுதியைச் சேர்ந்த மனோரி நிசன்சலா ஹரிச்சந்திர என்ற 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த துணிகளை எடுக்கச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.