உயர் நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களில் தற்போது
நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 20,075 ஆகும்.
இவற்றில் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7,495. மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 12,580 ஆகும்.
இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,751 முறைப்பாடுகள் பொலிஸ் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கடந்த வருடம் 9,436 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இரண்டு வருடங்களிலும் கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடம் 1,174 முறைப்பாடுகளும் இந்த வருடம் இதுவரை 293 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
மேலும், இவ்வருடம் இதுவரையில் 538 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதுடன் கடந்த வருடம் 1612 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த தகவல்கள் நேற்று (14) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன.