தரமற்ற மருந்துக் கொள்வனவு சம்பவம் தொடர்பான
விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு இன்று (14) நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை செல்லுபடியற்றதாக்கி உத்தரவு பிறப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் முன்னாள் வழங்கல் பணிப்பாளர் டாக்டர் கபில விக்கிரமநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவைபரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இம்மாதம் 30 ஆம் திகதியை குறித்துள்ளது.