உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை அமுல்படுத்தாமல் மறைத்த கோட்டாபய ராஜபக்க்ஷவின் இதே நடவடிக்கைகளையே தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தாக்குதலைத் தடுக்காத முன்னாள் ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஏன் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் பேராயர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.