ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடை உத்தரவுக்கு உள்ளான தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர், இன்று காலை எதுல்கோட்டையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நிறைவேற்றுக் குழுவை கூட்டி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர், கட்சியின் அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்தே இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக, மருதானை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அங்கு பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.