வெள்ளப்பெருக்கு காலத்தில் கம்பஹா நகரம் நீரில் மூழ்கியது என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் கிராண்ட்பாஸ் புனித ஜோசப் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின்போது கருத்துத் தெரிவித்த கர்தினால் ரஞ்சித் ஆண்டவர், முத்துராஜவெல சதுப்புநிலத்தை அத்துமீறி நிரப்புவதைத் தடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
"கடந்த காலங்களில் கம்பஹா நகரம் வெள்ளத்தில் மூழ்கியதை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. இந்த முறை நகரம் நீரில் மூழ்கியது முத்துராஜவெல அத்துமீறி நிரப்பப்பட்டதன் விளைவாகவே," என்று அவர் குறிப்பிட்டார்.


