ஆண்டவர் உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் பொறுப்பாளர் (Chargé d'affaires) மொன்சிஞ்ஞோர் ரொபேர்டோ லூச்சினி அடிகளார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது துக்கத்தை வெளிப்படுத்துமாறும், இந்த கடினமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் போப் ஆண்டவர் லியோ தனக்குத் தெரிவித்ததாக அடிகளார் லூச்சினி வெளிப்படுத்தினார்.
"இந்த அனர்த்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் செயற்படுமாறு போப் ஆண்டவர் இலங்கைப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


