தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பீன்ஸ் இன் மொத்த விலை 900 ரூபாவிலிருந்து 1,000 ரூபா வரை உயர்ந்துள்ளது.
கெப்பட்டிப்பொல பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (10ஆம் திகதி) ஒரு கிலோ பீன்ஸ் இன் மொத்த விலை 800 ரூபாவிலிருந்து 1,000 ரூபா வரை இருந்தது. நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பீன்ஸ் இன் விலை 1,300 ரூபாவிலிருந்து 1,400 ரூபா வரை உயர்ந்திருந்தது.
தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தின் தகவல்களின்படி, ஒரு கிலோ குடைமிளகாயின் விலை 1,000 ரூபாவிலிருந்து 1,200 ரூபா வரை உயர்ந்திருந்தது. ஒரு கிலோ பாகற்காயின் மொத்த விலை 600 ரூபாவிலிருந்து 650 ரூபா வரையிலும், ஒரு கிலோ புடலங்காயின் விலை 380 ரூபாவிலிருந்து 400 ரூபா வரையிலும் உயர்ந்துள்ளது.


