விவகாரங்களுக்குப் பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் என்ற ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
'இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக்கூறுதலுக்கும் புதிய அரசமைப்பு சீர்திருத்தம் மிகவும் அவசியமாகும். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு நல்லிணக்கத்துக்கு வலுச்சேர்க்கும். இனங்களுக்கிடையில் ஏற்படுகின்ற நல்லிணக்கம், அமைதி மற்றும் வன்முறையற்ற சூழலை உருவாக்குவதோடு நாட்டின் அரசியல் ஸ்திரத் தன்மையைப் பலப்படுத்தும்.
'ஆகவே, இனங்களுக்கிடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் இனியும் ஏற்படாமல் இருக்க நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் புதிய அரசமைப்பு சீர்திருத்தம் மிகவும் அவசியம் என நம்புகின்றேன்' என்றார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


