Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

100ஆவது நாளை எட்டிய மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; தீப்பந்தங்களுடன் வீதிக்கிறங்கிய மக்கள்!

T

The Leader Desk

நவம்பர் 11, 2025 • 4:23 AM

100ஆவது நாளை எட்டிய மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; தீப்பந்தங்களுடன் வீதிக்கிறங்கிய மக்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாளை எட்டிய நிலையில் நேற்று இரவு தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
  • மக்களையும், மக்களின் வாழ் விடங்களையும், நாட்டின் வளத்தையும், பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடம் கையளிக்கும் மாபெரும் வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் 100வது நாளை ஈட்டிய நிலையில், இன்னும் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
  • இப்போராட்டத்தின் 100வது நாளை நினைவுகூரும் இந்நாளில், மூன்று காத்திரமான கோரிக்கைகளை மக்கள் சார்பில் முன் வைத்துள்ளனர்.
  • மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது.
எழுத்து அளவு:

நாளை எட்டிய நிலையில் நேற்று இரவு தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக் குழுவின் ஏற்பாட்டில், அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் குறித்த தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், போராட்டக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காற்றாலைக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மக்களையும், மக்களின் வாழ் விடங்களையும், நாட்டின் வளத்தையும், பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடம் கையளிக்கும் மாபெரும் வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் 100வது நாளை ஈட்டிய நிலையில், இன்னும் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தின் 100வது நாளை நினைவுகூரும் இந்நாளில், மூன்று காத்திரமான கோரிக்கைகளை மக்கள் சார்பில் முன் வைத்துள்ளனர்.

மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது.

அமைக்கப்பட்ட 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் ஆகிய காத்திரமான 3 கோரிக்கைகளையும், அரசு தம் மக்களின் கோரிக்கையாக ஏற்றுக்கொண்டு, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், எங்களுடைய மக்களின் இந்த புனிதமான அறவழிப் போராட்டம் நிறைவுக்கு வரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீப்பந்த எழுச்சி போராட்டம் நாளை முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என போராட்டக்குழு சார்பாக அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

100ஆவது நாளை எட்டிய மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; தீப்பந்தங்களுடன் வீதிக்கிறங்கிய மக்கள்! | Tamil Leader | We Lead the Nation