Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கை - பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்; பாக். வீரர் நஷீம் ஷா வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

T

The Leader Desk

நவம்பர் 11, 2025 • 4:05 AM

இலங்கை - பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்; பாக். வீரர் நஷீம் ஷா வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ராவல்பிண்டியில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
  • இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், ஒரு போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன.
  • இந்த சம்பவம் தொடர்பாக நஷீம் ஷாவின் தந்தை பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.
எழுத்து அளவு:

ராவல்பிண்டியில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், ஒரு போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 3 போட்டிகளைக் கொண்டது.

இந்நிலையில், பாக்கிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நஷீம் ஷாவின் லோவர் டிர் பகுதியில் உள்ள வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், சந்தேகநபர்கள் நஷீம் ஷாவின் வீட்டின் வாயில் கதவை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நஷீம் ஷாவின் தந்தை பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் போட்டிகளில் பங்கேற்பதற்காக நஷீம் ஷா தற்போது ராவல்பிண்டியில் தங்கியுள்ளார். சம்பவம் அவரது கிரிக்கெட் தொடரில் பங்கேற்புக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என பாக்கிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், அவர் இன்று நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...