Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

முன்னாள் அமைச்சர் டிரானுக்கு இறுதி எச்சரிக்கை!

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2025 • 4:54 AM

முன்னாள் அமைச்சர் டிரானுக்கு இறுதி எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • கடந்த ஜூலை 09ஆம் திகதி, முன்னாள் அமைச்சரின் அலுவலகத்திற்கு அக்கடிதம் கிடைத்த நிலையில், உடனடியாக அது பதில் பொலிஸ்மா அதிபரிடம் அனுப்பப்பட்டதன் பின்னர், டிரான் அலஸிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
  • இதேவேளை, கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி "இறுதி அறிவித்தல்" எனக் குறிப்பிட்டு அச்சுறுத்தல் விடுக்கும் கடிதம் ஒன்று டுபாயிலிருந்து முன்னாள் அமைச்சரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது.
  • அந்தக் கடிதத்தில் உள்ள முத்திரைக் குறிப்புகளின்படி, அது ஜூலை 16ஆம் திகதி தபால் செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

'யுக்திய' (நீதி) நடவடிக்கையினால் தமது உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாகவும், அதனால் தமது வியாபாரங்கள் அழிந்து, குடும்பங்கள் சிதைந்து சிதறிப் போனதாகவும் குறிப்பிட்டு, நிச்சயமாக இதற்குப் பழிவாங்குவதாகவும், உயிருடன் இழப்பீடு வழங்கத் தயாராகுமாறும் தெரிவித்து, அரபு இராச்சியத்திலிருந்து டிரான் அலஸுக்கு ஒரு அநாமதேய கடிதம் முதன்முறையாக கடந்த மே மாதம் 04ஆம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது.

கடந்த ஜூலை 09ஆம் திகதி, முன்னாள் அமைச்சரின் அலுவலகத்திற்கு அக்கடிதம் கிடைத்த நிலையில், உடனடியாக அது பதில் பொலிஸ்மா அதிபரிடம் அனுப்பப்பட்டதன் பின்னர், டிரான் அலஸிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி "இறுதி அறிவித்தல்" எனக் குறிப்பிட்டு அச்சுறுத்தல் விடுக்கும் கடிதம் ஒன்று டுபாயிலிருந்து முன்னாள் அமைச்சரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் உள்ள முத்திரைக் குறிப்புகளின்படி, அது ஜூலை 16ஆம் திகதி தபால் செய்யப்பட்டது.

எவ்வளவு பாதுகாப்பின் கீழ் இருந்தாலும், அதிக நாட்கள் செல்வதற்குள் கொலை செய்துவிடுவதாக அந்தக் கடிதத்தின் மூலம் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் அந்த எழுத்து மூலமான கடிதத்தையும் பொலிஸ்மா அதிபரிடம் அனுப்பியுள்ளதாக மேற்கண்ட தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...