முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் விடயம் சந்தேகத்திற்குரியது என்று, ஐமச பாராளுமன்ற

உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன தெரிவித்திருக்கிறார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பான உண்மை தனக்குத் தெரியும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பான முறைப்பாடொன்றைச் செய்திருந்த நிலையில், அது பற்றிய வாக்குமூலத்தை வழங்க ஏப்ரல் 10-ம் திகதியன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று திரும்பிய போது, காவிந்த எம்பி அவ்வாறு கூறியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய விடயத்தை கூறிவிட்டு, அவர் இவ்வாறு வெளிநாடு சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும், அதன்போது காவிந்த எம்பி குறிப்பிட்டிருந்தார். “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒருபுறம் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை மறைக்கும் குற்றத்திற்கு இலக்காவார். மறுபுறம், அவர் கூறியது பொய்யாயின், அப்பாவி மக்களின் மரணத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய நபரை காட்டிக்கொடுக்காமல் காப்பாற்றப் போகிறார்.

அவ்வாறில்லாவிடின், விசாரணையை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது. எவ்வாறாயினும், அவர் தெரிவித்த கருத்து மிகவும் பாரதூரமானது. அதிலிருந்து அவர் தப்ப முடியாது. ஆனால், எங்களுக்கு தெரியும் அவர் தனது கருத்தை அடிக்கடி மாற்றி வெவ்வேறு கதைகளை கூறுபவராவார். மைத்திரிபால சிறிசேன, இந்நாட்டையும் அழித்து மக்களையும் அழித்து, தற்போது மாட்டிக்கொண்டிருக்கிறார். இவ்வளவு பிரச்சனைகளையும் இந்த நாட்டுக்கு ஏற்படுத்திவிட்டு, அவர் தற்போது பேங்க்கொக் சென்றிருக்கிறார்.

இது, தப்பிச்செல்லும் தந்திரோபாயமா என்று எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அவரை உடனடியாக வரவழைத்து, சட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்று உரிய நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று காவிந்த எம்பி மேலும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் மைத்திரிபாலவை சிக்கவைக்கப் பார்ப்பது, ரணிலின் தேவையா அல்லது சஜித்தின் தேவையா என்றும் சிலர் சந்தேகப்படத் தொடங்கி இருக்கின்றனர். எவ்வாறாயினும், கைப்பிரச்சினை பெரும் பிரச்சனையாக மாறிக்கொண்டு வருகிறது.

காரணம், இந்தப் பிரச்சனைகள் அனைத்துக்கும் மூல காரணியான மைத்திரிபால சிறிசேன, தற்போது நாட்டில் இல்லை. அவருடைய மகளின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, வீட்டுக்கு தீ வைத்து விட்டு அவர் தப்பி ஓடிவிட்டார். குறைந்தபட்சம், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் நடைபெற்று ஐந்தாண்டுகள் பூர்த்தியாகும் வரையில், அவர் இலங்கைக்கு வரமாட்டார் என்று சிலர் கூறியிருந்தனர். தற்போது மைத்திரிபால தரப்பும் நிமல் சிறிப்பால தரப்பும், டாலி வீதியில் உள்ள சொத்துக்களுக்கு அடிபிடிபடத் தொடங்கி இருக்கின்றனர்.

கட்சித் தலைமையகத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என்று, இரு தரப்பும் கூறுகிறது. சித்திரைப் புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தை திறந்து, அதன் அதிகாரத்தை கைப்பற்றி கட்சியை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவு வழங்கும் அமைச்சர் நிமல் சிறிப்பால தலைமையான குழு அறிவித்திருக்கிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் யாப்பை உடனடியாக மாற்றியமைத்து, புதிய தலைவர் பதவியுடன் கூடிய மாற்றங்களை ஏற்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவை தொடர்ந்து அக்கட்சியின் தலைமைத்துவ பதவியில் தக்கவைக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவானது, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உதவும் குழுவுக்கு, கட்சிக்குள் எந்தவோர் அதிகாரமும் இல்லை என்று குறிப்பிடுகிறது.

கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு, நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்குழு கூறுகிறது. அதாவது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபட்டிருக்கும் இரண்டு குழுக்களின் பிரச்சின, புத்தாண்டுக்குப் பின்னர் சூடு பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விளையாட்டுக்கு பின்னால் ரணில்தான் இருக்கிறார் என்று மைத்திரிபாலவின் குழு கூறுகிறது.

அதாவது, இந்தப் பிரச்சினை மென்மேலும் சூடு பிடிக்கும் போலிருக்கிறது. சிலவேளை தேர்தல் முடியும் வரையில், சுதந்திர கட்சியின் பிரச்சனை நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலா. அதனால், இந்தப் பிரச்சினை மிகவும் பாரதூரமானதென்று, பலரும் புரிந்துகொண்டுள்ளனர். அதனால் இதைச் சமாளித்துக்கொள்ள, சஜின்வாஸ் குணவர்தன, துமிந்த திசாநாயக்கவுக்கு Call எடுத்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

இரண்டு பக்கங்களுக்கும் பிரச்சனை ஏற்படாத வகையில் இதனை நிவர்த்தி செய்துகொள்வோம் என்றும் யோசனை முன்வைத்திருக்கிறார். ஆனால், அதற்கு துமிந்த தரப்பில் இருந்து எந்தவொரு நல்ல பதிலும் வழங்கப்படவில்லை. சந்திரிகாவிடம் கேட்காமல் எந்தத் தீர்மானமும் எடுக்கப்போவதில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் போலும். காரணம், துமிந்த, அமரவீர தரப்பை, சந்திரிகாதான் வழிநடத்துகிறார். எவ்வாறாயினும், கையைக் கைப்பற்றப் போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக, ஜனரஜ கட்சி கூறுகிறது.

ஜனரஜ கட்சி என்பது, சம்பிக்க ரணவக்கவின் கட்சியாகும். ஆனால் எது நடக்கவும், முதலில் சுதந்திர கட்சிக்கு எதிரான வழக்குகளை முடிவுறுத்த வேண்டும். புதிய கூட்டணி அமைப்பதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ள வெற்றிலைச் சின்னக் கட்சியைப் போன்றே, கதிரைச் சின்னக் கட்சியின் உரிமை தொடர்பான பிரச்சனை எழுந்திருக்கிறதாம். எவ்வாறாயினும், சுதந்திர கட்சி என்பது, விஜயவீரவின் எதிர்வுகூரல்களைக்கூட பொய்யாக்கிய கட்சியாகும். எல்லாவிதமான பிரச்சனைகளையும் சந்தித்த கட்சியாகும். இந்நாட்டை அதிக முறை ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையும் அதற்கு உள்ளது. அதனால், எவராலும் இந்தக் கட்சி தொடர்பில் குறைத்து மதிப்பிட முடியாது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி