முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நள்ளிரவில்(09) நாட்டிலிருந்து

புறப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினரே இந்தப் பயணத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரி உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய் ஏர்வேஸ் டிஜி-308 விமானத்தில் தாய்லாந்திற்கு புறப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்தவாரம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் சுதந்திர கட்சி உறுப்பினர்களிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் மைத்திரிபால சிறிசேன நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதேவேளை மைத்திரி உள்ளிட்ட குழுவினர் தாய்லாந்திற்கு விஜயம் செய்தமைக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி