மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கும் நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தை, நெலும்

மாவத்தையிலுள்ள கட்சிக் காரியாலயத்திலோ அல்லது வேறு ஏதாவது பொது இடத்திலோ நடத்தாமல், மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடத்தியமை தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

“மஹிந்தவின் வீட்டுக்கே பெசிலை அழைத்துவந்து, அவரது சிறகுகள் முறிக்கப்பட்டுள்ளன” என்று, ஜேவிபிக்கு சார்பான lankatruth, செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கதைகளின் உண்மை எதுவாயினும், தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்ட நாள் முதல், நாமல் கடும் பிஸியாக இருக்கிறாராம். பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் வரையிலான அனைவரையும் வெற்றிகொள்ள, “தசபல சேனா” என்ற பிரச்சார திட்டத்தில், புதிய அங்கம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.

மார்ச் 30 அன்று, தங்காலை பேருந்து நிலையத்திற்கு முன்பாக, "பத்து அதிகாரங்கள் பிரச்சாரத் திட்டத்தின்" மாபெரும் கூட்டம் நடைபெற்றது. அதன்போது, மொட்டுக் கட்சியின் சலூன் கதவி திறக்கப்பட்டுள்ளது என்று, நாமல் கூறுகிறார். அது மாத்திரமின்றி, எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க, மொட்டுக் கட்சி தயாராக உள்ளதென்று, ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார். கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரென்றும், நாமல் தெரிவித்துள்ளார்.

நாமல் அவ்வாறு தெரிவிக்கும்போது, மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட எம்பிக்கள் சிலர், நாமலை விட்டுவிட்டு, ரணிலிடம் தஞ்சமடையத் தயாராக உள்ளனரென்று, “ஏஷியன்மிரர்” செய்தி வெளியிட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவுக்கு, மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில், அக்கட்சியின் சிரேஷ்ட எம்பிக்கள் பலரும், பெரும் விரக்தியில் இருக்கின்றனர் என்றும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் அதுபற்றி, கட்சியின் நிறுவுனர் பெசில் ராஜபக்ஷவிடமும் தெரிவித்துள்ளனர் என்றே, ஏஷியன்மிரர் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அந்தச் சிரேஷ்ட எம்பிக்களின் குற்றச்சாட்டுகளை, பெசில் கணக்கெடுக்கவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சுயாதீனமாக ஆதரவளிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர் என்று, ஏஷியன்மிரர் மேலும் தெரிவித்துள்ளது.

அந்தக் கதைகளின் உண்மை, பொய் எதுவாயினும், ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவான பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த குழு, நாமலின் தங்காலை கூட்டத்திற்குச் செல்ல முடிவு செய்து, கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. கிடைத்துள்ள தகவல்களின்படி, 29-ம் திகதி இரவு, பெசிலுக்கு Call செய்துள்ள பிரசன்ன, இவ்வாறு கூறியுள்ளார். “இப்படி முடியாது சர். பொதுத் தேர்தலா, அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பதுபற்றி, கட்சிய என்ற ரீதியில், நாம் எமது பொது நிலைப்பாட்டை இந்நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நான், தனிநபர்கள் பற்றிப் பேசுவதில்லை. கட்சி உறுப்பினர்களுக்காகப் பேசுகிறேன். இப்போதைய நிலைமையில் பொதுத் தேர்தலுக்குச் சென்றால், மொட்டுக் கட்சின் அநாதரவான நிலைமைக்குத் தள்ளப்படும்” என்று, பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

“அவசரப்படாமல் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பிரசன்ன. என்ன நடக்குதென்று, நாம் கொஞ்சநாள் பொறுத்திருந்துப் பார்ப்போம்” என்று, பெசில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் பிரசன்ன, நாமலுக்கு Call செய்துள்ளார். “தம்பி, நான் நாளைக்கு, தங்காலைக் கூட்டத்துக்கு வரமாட்டேன். காரணம், நான் வேறொரு நிலைப்பாட்டில் இருக்கிறேன். அதுவும், எமது கட்சி உறுப்பினர்களுக்காகத்தான். நான், கட்சிக்காக எப்போதும் இருப்பேன். உங்களுடைய வேலைகளுக்கும் நான் சப்போட் செய்வேன். ஆனால், நாளைய வேலைக்கு நான் வரமாட்டேன்” என்று, நாமலுக்கு பிரசன்ன கூறியிருக்கிறார்.

அந்தச் செய்திகளில் என்ன இருந்தாலும், இப்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, மொட்டுக் கட்சிக்குள் வேட்பாளர் யாரும் இல்லை. மறுபுறம், இன்னும் 5 வருடங்களுக்கு ரணிலுடன் செல்ல விரும்பும் பெரும்பான்மையான எம்பிக்களே உள்ளனர். அதனால், சித்தப்பாக்கள், Babyக்கள் என்ன செய்தாலும், இப்போது பின்வங்குவது கடினம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி