Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

தமிழ் மொழியில் பொலிஸ் முறைப்பாடு செய்ய 107க்கு அழைக்கவும்!

T

The Leader Desk

மார்ச் 16, 2024 • 1:32 PM

தமிழ் மொழியில் பொலிஸ் முறைப்பாடு செய்ய 107க்கு அழைக்கவும்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற இலக்கத்தின் ஊடாக தமிழ் மொழியிலும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் நேரடியாக பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏதேனும் அவசர நிலையின் போது தமிழ் மொழியில் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய இலக்கமொன்றை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை இன்று (16) மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்படி 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற இலக்கத்தின் ஊடாக தமிழ் மொழியிலும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் நேரடியாக பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை காலமும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அவசர தொலைபேசி இலக்கம் செயற்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ் பேசும் மக்களுக்காக பிரத்தியேகமாக இவ் இலக்கம் அறிமுகப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...