மேற்கொள்ளப்பட்டதே என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
"சரியான திட்டமிடல் இல்லாமல், வெவ்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழும், முற்றிலும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழும் எடுக்கப்பட்ட முடிவுகளால்தான் கொழும்பு மாவட்ட மக்கள் இந்த அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
ஜனாதிபதி அவர்கள் முன்வைத்ததன் பிரகாரம், இனிமேல் இந்த விதமான அத்துமீறிய கட்டுமானங்களுக்கும், ஆபத்தான இடங்களில் மக்கள் இவ்வாறு கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும் எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். கொழும்பு மாவட்டத்தில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று வழிகளைக் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்."
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுவான திட்டம் ஒன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
"திட்டமிடல் இல்லாமலும், சட்டதிட்டங்கள் பற்றி எந்த மதிப்பீடும் இல்லாமலும், கொழும்பு மாவட்டத்தின் அபிவிருத்தி என்ற பெயரில் அத்துமீறிய கட்டுமானங்கள் மற்றும் குடியேற்றங்களை உருவாக்க நாம் இடமளிக்க முடியாது. எனவே, கொழும்பு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் விதத்தில், வெள்ளம் கொழும்பு மக்களின் வாழ்க்கையின் வருடாந்திர ஒரு பகுதியாக மாறும் நிலைமைக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
"இதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நாங்கள் பேசினோம். அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நிறுவனங்களும் இணைந்து ஒரு பொதுவான திட்டத்தை முன்வைத்து, அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம்."


