ரஷ்யாவின் மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவிப் பொருட்கள் 35 டொன் அளவுடன் விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டதாக, இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர இன்று அதிகாலை தெரிவித்துள்ளார்.
"டித்வா" புயலின் தாக்கம் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தமான "டித்வா" புயலின் தாக்கம் காரணமாக 639 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 10% வீதமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


