Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வடமேல், மத்தி, ஊவா மாகாணங்களின் 147 பாடசாலைகள் 16இல் திறக்கப்படாது!

T

The Leader Desk

டிசம்பர் 10, 2025 • 4:51 AM

வடமேல், மத்தி, ஊவா மாகாணங்களின் 147 பாடசாலைகள் 16இல் திறக்கப்படாது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாட்டாது என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
  • அத்துடன், இந்த வருடத்திற்கான மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது என்பதுடன், உயர் தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களை ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள், நத்தார் விடுமுறைக்காக 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.
  • அதன் பின்னர் டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று தினங்களும் பாடசாலைகள் நடத்தப்பட்டு மூன்றாம் தவணை நிறைவு செய்யப்படும்.
எழுத்து அளவு:

மாட்டாது என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்திற்கான மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது என்பதுடன், உயர் தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களை ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள், நத்தார் விடுமுறைக்காக 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும். அதன் பின்னர் டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று தினங்களும் பாடசாலைகள் நடத்தப்பட்டு மூன்றாம் தவணை நிறைவு செய்யப்படும். அடுத்த வருடத்திற்கான முதல் தவணை ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

உயர் தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் நடைபெறுவதனால், ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாடசாலைகள் மீண்டும் மூடப்படும். அதன் பின்னர் ஜனவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள், சாதாரண தரப் பரீட்சைக்காக மீண்டும் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 2ஆம் திகதி வரை மூடப்பட்டு, மார்ச் 3ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் 10ஆம் திகதியுடன் முதலாம் தவணை நிறைவு செய்யப்படவுள்ளது.

ஆறு முதல் பதினொரு வரையான வகுப்புகளுக்குப் பரீட்சை நடத்தப்பட மாட்டாது என்றாலும், இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பதினொரு வகுப்பு மாணவர்களுக்காக ஒத்திகைப் பரீட்சை (Pre-test) ஒன்றை நடத்துவதற்குப் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

ஆரம்பிக்கப்பட மாட்டாத பாடசாலைகளில் 115 பாடசாலைகள் மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவை, ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும் இதில் அடங்கும். அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின் படி, இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகள் அமுல்படுத்தப்படும். 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கை 9,929 ஆகும்.

இந்த விடயங்களை நேற்று (09ஆம் திகதி) கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ வெளிப்படுத்தினார்.

அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் சீருடை மற்றும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் ஆடைகள் தொடர்பில் நெகிழ்வான கொள்கை (Flexible Policy) பின்பற்றப்படும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.

16ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் திகதி சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும், இந்த அனைத்து விடயங்களும் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படும் என்றும் செயலாளர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வடமேல், மத்தி, ஊவா மாகாணங்களின் 147 பாடசாலைகள் 16இல் திறக்கப்படாது! | Tamil Leader | We Lead the Nation