'சிறிகொத்த' கட்சித் தலைமையகத்தில் பதவியேற்க உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் அரசியல் ரீதியாக அணிதிரட்டுவது அவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பாரிய அரசியல் தாக்குதலைத் தொடங்குவதற்காக பொது எதிர்க்கட்சி தயாராகி வரும் நிலையில், அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) ஒரு முக்கியப் பங்கு முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி நுவரெலியாவில் ஏற்பாடு செய்யவுள்ள "மக்கள் குரல்" (ஜன ஹண்ட) பொதுக் கூட்டத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹரீன் பெர்னாண்டோவிடம் ஒப்படைத்துள்ளார் என்று ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


