புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, பிமல் நிரோஷன் ரத்நாயக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதனடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களாக,
பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாடு
அநுர கருணாதிலக்க - துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து
சுசில் ரணசிங்க - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரதி அமைச்சர்களாக,
அனில் ஜயசிங்க - திட்டமிடல் பிரதி அமைச்சர்
டி.பி சமன் - வீடமைப்பு, நீர் வழங்கல் பிரதி அமைச்சர்
எம்.எம்.மொஹமட் மூனீர் - மதவிவகார கலாசார பிரதி அமைச்சர்
முதித்த ஹங்சக்க விஜயமுனி - சுகாதார பிரதி அமைச்சர்
அரசிந்த செனரத் விதாரண - காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர்.
எச்.எம்.தினிது சமன் குமார - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்.
யு.டி.திசாந்த ஜயவீர - பொருளாதார பிரதி அமைச்சர்
கௌசல்ய ஆரியரத்ன - ஊடகத்துறை பிரதி அமைச்சர்
எம்.ஐ.எம். அர்கம் - மின்சக்தி பிரதி அமைச்சர்


