(15,000) ரூபாவால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை ஆபரண விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இவ்வாறு விலை அதிகரித்ததன் காரணமாக தங்க விற்பனை சுமார் அறுபது சதவீதத்தால் (60%) வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை மூன்று லட்சத்து மூவாயிரம் (303,000) ரூபாவாக இருந்தது எனக் குறிப்பிட்ட அவர், நேற்று (09ஆம் திகதி) முற்பகல் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை மூன்று லட்சத்து இருபத்தெட்டாயிரம் (328,000) ரூபாவாக இருந்தபோதிலும், நேற்று (09ஆம் திகதி) நண்பகலளவில் அது மூன்று லட்சத்து முப்பதாயிரம் (330,000) ரூபாவாக உயர்ந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது இலங்கையில் தங்கக் கட்டிகளை (Gold Biscuits) கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால், பாவித்த தங்கத்தை வாங்கி, அவற்றை அழித்து மீண்டும் தங்க ஆபரணங்களைத் தயாரிக்க வேண்டிய நிலைக்கு ஆபரண விற்பனை நிலைய உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடமிருந்து தங்கம் கொள்வனவு செய்யப்படுவதாகவும், தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்யும் போது இருபத்தெட்டு சதவீத (28%) வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், ஏனைய வரிகளுடன் சேர்த்து அது ஐம்பது சதவீதம் (50%) வரை அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக, ஆபரண விற்பனையில் ஈடுபடும் எவரும் தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


