முழுமையான தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் மாகும்பர பல்வகை போக்குவரத்து மையமும் இணைந்து இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும், ஒரு முன்னோடித் திட்டமாக இந்தப் பரிசோதனைகள் இன்று முதல் மேற்கொள்ளப்படும் எனவும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் (தொழில்நுட்பம்) அருண பதிகம தெரிவித்தார்.
கரண்டியெல்ல மற்றும் எல்ல பேருந்து விபத்துக்களைத் தொடர்ந்து, பயணிகள் பேருந்துகள் தொடர்பில் பல பரிந்துரைகளும் உத்தரவுகளும் முன்மொழியப்பட்டன. அதில், நீண்ட தூர சேவைப் பேருந்துகள் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் அவற்றின் இயந்திரவியல் நிலைமைகள் குறித்து பரிசோதித்துச் சான்றிதழ் பெறுவது அவசியம் என்பது பிரதான முன்மொழிவாக இருந்தது.
மாகும்பர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து 09 இடங்களுக்குத் தினசரி 135 பேருந்து பயணங்கள் இயக்கப்படுவதாகவும், இந்தப் பேருந்துகளைப் பயணத்திற்கு முன் பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த மையத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சித்திட்டம், போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க மற்றும் மாகும்பர பல்வகை போக்குவரத்து மையத்தின் பணிப்பாளர் நாலக திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் இன்று (10) காலை ஆரம்பித்து வைக்கப்படும்.


