Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இன்று முதல் பீடி விலை அதிகரிப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 10, 2025 • 3:41 AM

இன்று முதல் பீடி விலை அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • இந்த விலை உயர்வுடன், இரண்டேகால் அங்குல பீடியின் சில்லறை விலை 15 ரூபாவாகவும், இரண்டு அங்குல மற்றும் சிவப்பு நூல் பீடியின் சில்லறை விலை 13 ரூபாவாகவும் உயர்வடையும் என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • இதற்கு முன்னர் இரண்டேகால் அங்குல பீடி 10 ரூபாவிற்கும், இரண்டு அங்குல மற்றும் சிவப்பு நூல் பீடி ஒன்பது ரூபாய் ஐம்பது சதத்திற்கும் (9.50) விற்பனை செய்யப்பட்டதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டது.
  • ஒரு பீடிக்கான வரியை தற்போதைய அரசாங்கம் 2 ரூபாவிலிருந்து 3 ரூபாவாக அதிகரித்தமையும், ஏனைய செலவுகள் உயர்ந்ததன் காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்தமையாலும் பீடியின் விலையை அதிகரிக்க நேரிட்டதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எழுத்து அளவு:

இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வுடன், இரண்டேகால் அங்குல பீடியின் சில்லறை விலை 15 ரூபாவாகவும், இரண்டு அங்குல மற்றும் சிவப்பு நூல் பீடியின் சில்லறை விலை 13 ரூபாவாகவும் உயர்வடையும் என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டேகால் அங்குல பீடி 10 ரூபாவிற்கும், இரண்டு அங்குல மற்றும் சிவப்பு நூல் பீடி ஒன்பது ரூபாய் ஐம்பது சதத்திற்கும் (9.50) விற்பனை செய்யப்பட்டதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டது.

ஒரு பீடிக்கான வரியை தற்போதைய அரசாங்கம் 2 ரூபாவிலிருந்து 3 ரூபாவாக அதிகரித்தமையும், ஏனைய செலவுகள் உயர்ந்ததன் காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்தமையாலும் பீடியின் விலையை அதிகரிக்க நேரிட்டதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு பீடியின் உற்பத்திச் செலவு சுமார் பதின்மூன்று ரூபாய் எழுபத்தைந்து சதம் (13.75) ஆக இருந்தபோதிலும், கடந்த காலத்தில் அந்தச் செலவிற்கும் குறைவான விலையில் பீடியை சந்தைக்கு விநியோகித்தமையால் தொழில்துறையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அந்தச் சங்கம், அரசாங்கத்திற்கு முறையாக வரி செலுத்த வேண்டுமெனில் பீடி விலையை அதிகரிப்பது கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பீடித் தொழில்துறையின் பிரதான மூலப்பொருளான 'தெந்துகொள' எனப்படும் பீடி இலையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவருவதைத் தடுக்க அதிகாரிகள் தவறியதால், பீடித் தொழில்துறை மேலும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அனைத்து பீடி வியாபாரிகளும் இந்த புதிய விலைக்கு இன்று (10) முதல் பீடியை விற்பனை செய்யாவிட்டால், அது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...