Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தற்போதைய அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்கவில்லை!

T

The Leader Desk

செப்டம்பர் 10, 2025 • 2:25 AM

தற்போதைய அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்கவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.
  • கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும்.
  • இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
எழுத்து அளவு:

அரசாங்கத்துக்கு இல்லை. மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த வகையில் தேசிய பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்போம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும். எனினும் அதற்கான காலம் தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது. இது குறித்த சட்ட திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இதற்கு முன்னர் செப்டெம்பரில் ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமானால் அரசாங்கங்கள் எவ்வாறு அழுத்தத்தில் இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எமது அரசாங்கத்துக்கு அவ்வாறு எந்த அழுத்தமும் இல்லை. கடந்த ஜூனில் நாட்டுக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை எமக்கு சார்பானதாகவே காணப்படுகிறது.

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. குறுகிய காலத்துக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எமது நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை, நம்பிக்கை பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தேசிய பொறிமுறைக்குள் மனித உரிமை மீறல்க்ள குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகின்றோம். இது தொடர்பில் சர்வதேசத்தின் மதிப்பீடுகளையும் அங்கீகரிக்கின்றோம். எனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அநாவசிய தலையீடுகளை செலுத்தி அவற்றை வீணடிக்க விரும்பவில்லை. அதேவேளை சிறிய அடிப்படைவாத, தீவிரவாத குழுக்கள் தலைதூக்குவதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

பயங்கரவாத தடை சட்டத்தையும் இரத்து செய்து, புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். நிகழ்நிலை காப்பு சட்ட திருத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.

-வீரகேசரி

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...