Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலி!

T

The Leader Desk

ஜூன் 6, 2021 • 5:40 AM

பர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
  • கடைகள், வீடுகளை தீ வைத்து எரித்தனர்.
  • பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்தனர்.
எழுத்து அளவு:

இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சண்டையின்போது பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் மாலி மற்றும் நைஜர் நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பர்கினோ பாசோவின் யாஹா மாகாணம் சோல்ஹன் கிராமத்திற்குள் நேற்று இரவு துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர்.

அந்த கிராமத்தில் இருந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், அந்த கிராமத்தின் சந்தை பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கடைகள், வீடுகளை தீ வைத்து எரித்தனர்.

பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பின்னர் பயங்கரவாதிகள் அந்த கிராமத்தை விட்டு தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடந்த கிராமத்திற்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...