Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ரூ. 100 மில்லியன் நட்டஈடு கோரி கெஹெலிய மனுத் தாக்கல்

T

The Leader Desk

பிப்ரவரி 29, 2024 • 2:03 PM

ரூ. 100 மில்லியன் நட்டஈடு கோரி கெஹெலிய மனுத் தாக்கல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
  • கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் ஊடாக இன்று (29) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
  • சிறைச்சாலையின் வாகனமொன்றில் இன்று பிற்பகல் அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
  • அதன் போது பெப்ரவரி 14ம் திகதி வரை கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் ஊடாக இன்று (29) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மாளிகாகந்தை நீதிமன்றில் முன்னிலைப்பட்டிருந்தார்.

சிறைச்சாலையின் வாகனமொன்றில் இன்று பிற்பகல் அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், தரமற்ற இம்யுனோகுளோபியுலின் தடுப்புசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த இரண்டாம் திகதி கைது செய்யப்பட்ட கெஹலியவை மூன்றாம் திகதி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.

அதன் போது பெப்ரவரி 14ம் திகதி வரை கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் பெப்ரவரி 14ம் திகதி மீண்டும் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் இன்று பிற்பகல் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...