Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் வன்முறை 10 பேர் பலி!

T

The Leader Desk

ஜூலை 13, 2021 • 6:30 AM

தென் ஆப்பிரிக்காவில் வன்முறை 10 பேர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா.
  • இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எண்ணிலடங்கா அரசு சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • இதில் ஒரு வழக்கில் அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • பல வாகனங்களும் தீக்கிரையாக்கப்படுகின்றன.
எழுத்து அளவு:

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எண்ணிலடங்கா அரசு சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில்  ஒரு வழக்கில் அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு  சிறைத்தண்டனை, கடந்த புதன்கிழமையிலிருந்து தொடங்கியது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரை விடுவிக்க வலியுறுத்தி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் என்ற பெயரில் கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்படுகின்றன.

ஆண், பெண், குழந்தைகள் என வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கடைகளில் புகுந்து பொருட்களை தூக்கிச் செல்கின்றனர். பல வாகனங்களும் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்த வன்முறைகளால் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் அதிகம் பாதிக்கப்பட்ட குவாஜூலூ-நேட்டல் மற்றும் காவ்டெங் மாகாணங்களில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

தென் ஆப்பிரிக்க நகரங்களில் பரவலாக நடக்கும் வன்முறைகளைத் தணிக்கும் பணிகளில்  ராணுவம் பயனபடுத்தப்படுமென அதிபர் சிறில் ராமபோசா கூறி  உள்ளார்.

இது குறித்து ராமபோசா கூறியதாவது:-

ராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.பொலிசாரின்  அனைத்து விடுமுறைகளும்  ரத்து செய்யப்பட்டு அவர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

மிரட்டல், திருட்டு மற்றும் கொள்ளை அச்சுறுத்தலுக்கு எதிராக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும்  பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். விரைவில் நாட்டில்  அமைதியையும் சட்டஒழுங்கையும் மீட்டெடுப்போம் என கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...