Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

T

The Leader Desk

ஜூன் 5, 2021 • 1:33 PM

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
  • ஆனாலும் அவர் உட்பட 10 பேர், நீதிமன்ற தடை உத்தரவை மீறி நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, அஞ்சலி செலுத்தி அதனை முகநூலிலும் பதிவேற்றி இருந்தனர்.
  • குறித்த சம்பவம் அறிந்த பொலிஸார், அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன் 3 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
  • அதனைத் தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுதியபோது 14 நாட்கள், நேற்று 4 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எழுத்து அளவு:

கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

ஆனாலும் அவர் உட்பட 10 பேர்,  நீதிமன்ற தடை உத்தரவை மீறி நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, அஞ்சலி செலுத்தி அதனை முகநூலிலும் பதிவேற்றி இருந்தனர்.

குறித்த சம்பவம் அறிந்த  பொலிஸார், அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன்  3 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுதியபோது 14 நாட்கள், நேற்று 4 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த காலம் நிறைவடைந்தமையினால் மீண்டும் வழக்கு விசாரணை நேற்று, நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாதமையினால், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான், காணொளி ஊடாக  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...