Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஹெச்10என்3 பறவைக் காய்ச்சல் சீனாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது!

T

The Leader Desk

ஜூன் 1, 2021 • 2:59 PM

ஹெச்10என்3 பறவைக் காய்ச்சல் சீனாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சீனாவின்,ஜியாங்சு நகரில் வசிக்கும் 41 வயதான ஒருவர்,காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுடன் ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • இதனையடுத்து,மே 28 ஆம் தேதியன்று அன்று அவருக்கு "எச் 10 என் 3 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் (ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா) வைரஸ்" இருப்பது கண்டறியப்பட்டது.
  • எனினும்,அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.ஆனால் அவர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
  • இதனைதொடர்ந்து,இந்த எச் 10 என் 3 வைரஸானது,குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு நோய்க்கிருமி என்றும்,இது கோழிகளின் மூலம் பரவும் வைரஸின் திரிபு மற்றும் அது பெரிய அளவில் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

சீனாவின்,ஜியாங்சு நகரில் வசிக்கும் 41 வயதான ஒருவர்,காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுடன்  ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து,மே 28 ஆம் தேதியன்று அன்று அவருக்கு "எச் 10 என் 3 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் (ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா) வைரஸ்" இருப்பது கண்டறியப்பட்டது.

உலகிலேயே இந்த வைரஸ் பாதித்த முதல் நபராக அவர் கருதப்படுகிறார். எனினும்,அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.ஆனால் அவர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மருத்துவ ஆய்வு செய்ததில் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று உறுதியானது. இதனைதொடர்ந்து,இந்த எச் 10 என் 3 வைரஸானது,குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு நோய்க்கிருமி என்றும்,இது கோழிகளின் மூலம் பரவும் வைரஸின் திரிபு மற்றும் அது பெரிய அளவில் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம்  இன்று தெரிவித்துள்ளது.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹெச்10என்3 பறவைக் காய்ச்சல் சீனாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது! | Tamil Leader | We Lead the Nation