Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

பாணின் எடை குறைந்தால் ரூ. 10,000 அபராதம்: வர்த்தமானியில் குறைபாடு

T

The Leader Desk

பிப்ரவரி 3, 2024 • 4:48 PM

பாணின் எடை குறைந்தால் ரூ. 10,000 அபராதம்: வர்த்தமானியில் குறைபாடு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அறிவிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
  • பாண் ஒன்றின் எடையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபை நேற்றையதினம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதன்படி, ஒரு இறாத்தல் பாண் ஒன்றின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
  • மேலும், ஒரு இறாத்தல் பாணிற்கான நிகர எடையில் 13 கிராம் வித்தியாசம் மாத்திரமே காணப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
  • இதேவேளை, அரை இறாத்தல் பாண் ஒன்றின் எடை 225 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அரை இறாத்தல் பாணிற்கான நிகர எடையில் 9 கிராம் வித்தியாசம் மாத்திரமே காணப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அறிவிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.

பாண் ஒன்றின் எடையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபை நேற்றையதினம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. 

இதன்படி, ஒரு இறாத்தல் பாண் ஒன்றின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்று  குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ஒரு இறாத்தல் பாணிற்கான நிகர எடையில் 13 கிராம் வித்தியாசம் மாத்திரமே காணப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரை இறாத்தல் பாண் ஒன்றின் எடை 225 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அரை இறாத்தல் பாணிற்கான நிகர எடையில் 9 கிராம் வித்தியாசம் மாத்திரமே காணப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நடைமுறைக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறில்லாத பட்சத்தில் விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு பாணின் எடை மற்றும் அரை பாணின் எடையை குறிப்பிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஒரு பாணின் எடை 450 கிராம் எனவும், அதிகபட்சமாக 13.05 கிராம் எடையைக் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரை பாணின் எடை 225 கிராம் இருக்க வேண்டும் என்றும், குறைக்கக்கூடிய அளவு 09 கிராம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...