Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அனர்த்தங்களால் இருப்பிடங்களை இழந்த பெருந்தோட்டக் குடும்பங்களுக்கு வீடுகள்!

T

The Leader Desk

அக்டோபர் 9, 2025 • 2:31 AM

அனர்த்தங்களால் இருப்பிடங்களை இழந்த பெருந்தோட்டக் குடும்பங்களுக்கு வீடுகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
  • குறித்த வேலைத்திட்டம் 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
  • குறித்த காலப்பகுதியில் 1,400 புதிய வீட்டு அலகுகளை அமைத்து, குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவு 4,500 மில்லியன் ரூபாயாகுவதுடன், 2025 ஆம் ஆண்டில் 1,300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் 1,400 புதிய வீட்டு அலகுகளை அமைத்து, குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவு 4,500 மில்லியன் ரூபாயாகுவதுடன், 2025 ஆம் ஆண்டில் 1,300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் தகைமை பெற்றுள்ள 495 பயனாளிக் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படாத எஞ்சிய குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அனர்த்தங்களால் இருப்பிடங்களை இழந்த பெருந்தோட்டக் குடும்பங்களுக்கு வீடுகள்! | Tamil Leader | We Lead the Nation