பவுண் ஒன்றின் விலை 3 இலட்சம் ரூபாய் என்ற எல்லையைத் தாண்டியுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியது.
ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை 4,011.18 அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.
இதன்படி, நேற்று முன்தினம் 290,500 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை, நேற்று முற்பகல் வேளையில் 296,000 ரூபாவாக அதிகரித்திருந்தது.
எவ்வாறாயினும், நேற்றைய தினத்தில் மூன்று தடவைகள் தங்கத்தின் விலை அதிகரித்து, தற்போது கொழும்பு செட்டித்தெரு சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 303,400 ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் 314,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை, நேற்று மாலை வேளையில் 328,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.


