தேயிலைத் தூள் உற்பத்திப் பிரிவில் இன்று (09) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தேயிலைத் தூள் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட தீ, தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சிய அறை வரை பரவியதால், பொதி செய்யப்பட்ட தேயிலைத் தூளும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பரவிக்கொண்டிருந்த தீயை அந்தத் தோட்டத்தின் தொழிலாளர்கள் இணைந்து ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும், தோட்ட நிர்வாகம் திட்டமிட்டு இந்தத் தீயை ஏற்படுத்தியதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரம் இதுவரை மதிப்பிடப்படாத நிலையில், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
தேயிலைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
நல்லத்தண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


