நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று (08) முற்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.
'டித்வா' சூறாவளி காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் அவற்றைச் சீரமைக்க எடுக்கப்படும் கால அவகாசம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சாதாரண திருத்தங்கள் மூலம் திறக்க முடியாத வீதிகள் குறித்து அதிகாரிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, இது தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் சில வீதிகள் மற்றும் பாலங்களைக் கட்டும்போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் மற்றும் பக்கச் சுவர்களைச் சீரமைப்பதற்கான நிதியை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த ஆண்டு முடிவதற்குள் அனைத்துச் சீரமைப்புப் பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.


