காய்ச்சி ஆற வைத்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அழைத்து, மக்களின் சுகாதார நிலைமையைச் சிறப்பாகப் பேணுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.
டெங்கு (Dengue) மற்றும் எலி ஜூரம் (Leptospirosis) குறித்து சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 80 சதவீத நீர் மூலங்கள் அசுத்தமாகி இருப்பதாகவும், அதனால் காய்ச்சிய நீரைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.


