நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி அவர்கள் தெரிவிக்கிறார்.
இந்த நீர் மிகவும் வேகமான நீரோட்டத்துடன் பாய்கிறது என்றும், அதனால் அதில் நீராடுவதைத், வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் பிரச்சினை இருந்தால் 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதிக மழை காரணமாக மண் நீருடன் நிறைந்துள்ளது என்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு பிரதீப் கொடிபிலி அவர்கள் கூறினார்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள நிவாரணக் குழுக்கள் ஆற்றி வரும் சேவையைப் பாராட்டிய அவர், அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை மாவட்டச் செயலாளர் ஊடாக உரிய நடைமுறைக்கு அமைய மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.


