தொடர்பான ஆலோசனைக் குழுவொன்றை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
மகா விகார வம்சத்தின் சியாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்கரும், பொலன்னறுவை சோளஸ்மஸ்தான ராஜமகா விஹாரையின் அதிபதியுமான சாஸ்திரபதி வண. வெடருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்தனபால உபாலி நாயக்க தேரர் தலைமையில் 19 பேர் கொண்ட துறவிகள் மற்றும் பொது உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்த குழுவாகும்.
சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விஹாரையின் பிரதான பதிவாளரான வண. கலாநிதி பஹமுணே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் அவர்களும் இக்குழுவின் உறுப்பினராக உள்ளார்.
இந்தத் தொல்பொருள் ஆலோசனைக் குழுவானது இந்த ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி முதல் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


