Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

2026க்கான வரவு-செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்!

T

The Leader Desk

நவம்பர் 8, 2025 • 5:45 AM

2026க்கான வரவு-செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது.
  • வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் மேலும் தெரிவித்தது.
  • ஜனாதிபதி அவர்கள் 4 மணி நேரத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தமை இதில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எழுத்து அளவு:

இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது.

வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் மேலும் தெரிவித்தது.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்கள் 4 மணி நேரத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தமை இதில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

2026க்கான வரவு-செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்! | Tamil Leader | We Lead the Nation